இன்றைய ராசி பலன் 17.05.2023

Date:

மேஷம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை சச்சரவு வந்து நீங்கும். உங்கள் மதிப்பை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.

ரிஷபம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்லுங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

மிதுனம்

திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கடகம்

உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். திடீரென்று முடிவுகள் எடுப்பீர்கள். உறவினர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

சிம்மம்

கணவன் – மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலைகள் தடையின்றி முடியும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.

கன்னி

சந்திராஷ்டமம் இருப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவரை ஒருவர் குறைக் கூறிக் கொண்டிருக்க வேண்டாம். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். பொறுமை தேவைப்படும் நாள்.

துலாம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

விருச்சிகம்

உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர்கள் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்களுக்குப் பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.

தனுசு

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். பிரார்த்தனையை குடும்பத்தினருடன் சேர்ந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

மகரம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. மகளுக்கு நல்ல வரன் அமையும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழையகடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.

கும்பம்

குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். மகிழ்ச்சியான நாள்.

மீனம்

கடந்த 2 நாட்களாக இருந்து வந்த மனஉளைச்சல் நீங்கி மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. வராது என்ற இருந்த பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். நன்மை கிட்டும் நாள்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20...

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...