இலங்கையில் ‘சினோபெக்’ ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு

Date:

சீன எண்ணெய் நிறுவனமான சினோபெக், செப். 20 ஆம் திகதி இலங்கையில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் நிர்ணயித்த அதிகபட்ச சில்லறை விலையை விட குறைந்த விலைக்கு எரிபொருளை விற்க அனுமதிக்கப்படும் என தெரிவித்தார்.

சினோபெக்கின் இலங்கை பிரவேசம் இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தை குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மேலும் இரண்டு சர்வதேச எரிபொருள் விநியோகஸ்தர்கள் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்திற்குள் செயற்பாடுகளை ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கிறது என தெரிவித்தார்.

புதிய ஒப்பந்தத்தின் கீழ், சீன நிறுவனத்திற்கு 150 எரிபொருள் நிலையங்களை இயக்க 20 ஆண்டு உரிமம் வழங்கப்படும், மேலும் 50 புதிய எரிபொருள் நிலையங்களில் முதலீடு செய்ய முடியும் மேலும் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...