உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்

Date:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 5-ம் திகதி இந்தியாவில் தொடங்குகிறது. உலகக்கோப்பையில் விளையாடும் 15 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

உலகக்கோப்பை போட்டிக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் உள்ளன. இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஒவ்வொரு அணியும், சுழற்பந்து வீச்சாளர்களை கூடுதலாக சேர்த்துள்ளன. இந்த நிலையில் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இருப்பார் என்று இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார்.

குல்தீப் யாதவுடன் ஐ.பி.எல். போட்டியில் நேரத்தை செலவிட்டுள்ளேன். அவர் ஒரு சிறப்புத்திறன் கொண்டவர். ஒவ்வொரு வீரருக்கும் நம்பிக்கை காட்டப்பட வேண்டும். அதை இந்திய அணி நிர்வாகம் செய்திருக்கிறது.

குல்தீப் யாதவ் எங்களுக்கு (இந்திய அணி) ஒரு துருப்பு சீட்டாக இருப்பார். அவரை பெரும்பாலான அணிகள் சவாலாக கருதுகின்றன.

இவ்வாறு அவர் கூறினர்.

சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் குல்தீப் யாதவ் 5 ஆட்டத்தில் 9 விக்கெட் வீழ்த்தினார்.

இதற்கிடையே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் முதல் 2 ஆட்டங்களுக்கு கேப்டன் ரோகித்சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ரோகித் சர்மா கூறும்போது, “குல்தீப் யாதவ் ஒரு சிறந்த பந்து வீச்சாளர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். நாங்கள் நிறைய விஷயங்களை யோசித்தே குல்தீப் யாதவுக்கு ஓய்வு அளிக்கும் முடிவை எடுத்தோம்.

உலகக்கோப்பைக்கு முன்னதாக குல்தீப் யாதவை அதிகம் வெளிப்படுத்த விரும்பாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 ஒரு நாள் போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 1½ ஆண்டுகளாக அவரை பார்த்து கொண்டிருக்கிறோம்.

அதனால்தான் அவரை அதிகம் வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர் இரண்டு ஆட்டங்களுக்கு வெளியே அமர்ந்து 3-வது ஆட்டத்தில் விளையாடுவது எங்களுக்கு சிறந்த முடிவாகும்” என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...