உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

Date:

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

 

வளங்களை குவித்து முன்னேற துடிப்பதால், பல்வேறு காரணங்களால் மனிதர்கள் இயற்கை வளங்களை அழித்து வருகின்றனர். இதனால் சுத்தமான காற்றை சுவாசிப்பது அரிதாகியுள்ளது.

 

தூய்மையான காற்றுள்ள இடங்களை தேடி அலையும் மனிதர்களுக்கு உலகில் சில இடங்களே மிஞ்சியுள்ளது.

 

அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த தீவு மாநிலம், டஸ்மேனியா. இம்மாநிலத்தின் வடமேற்கு முனையில் உள்ள தீபகற்ப பகுதி, கேப் க்ரிம். இது ‘உலகின் முனை’ (Edge of World)

எனவும் அழைக்கப்படுகிறது.

 

அன்தார்டிகாவிலிருந்து எவ்விதத்திலும் அசுத்தமாகாத வேகமான காற்று, மணிக்கு 180 கிலோமீற்றர் வேகத்தில் இங்கு வந்து சேர்கின்றது.

 

உலகின் பிற பகுதிகளிலிருந்து தொலைதூரம் இருப்பதாலும், சுற்றுலா பயணிகள் அறவே செல்லாத இடமென்பதாலும், பனிமலைகள் நிறைந்த தெற்கு கடற்பகுதியின் மீது பயணித்து வரும் காற்று இங்கு வந்தடைவதாலும், இங்குள்ள காற்று உலகிலேயே தூய்மையானது என காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சி விஞ்ஞானி டொக்டர். ஆன் ஸ்டேவர்ட் தெரிவித்துள்ளார்.

 

இதே போன்று உலகெங்கிலும் உள்ள பிற சுத்தமான காற்று உள்ள தளங்கள், அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள தீவு மாநிலமான ஹவாயில் உள்ள மௌனா லோவா, பசிபிக் கடற்பகுதியின் தென்மேற்கு பகுதியில் உள்ள மக்குவாரி தீவு, அண்டார்டிகாவில் உள்ள கேசி நிலையம் மற்றும் நார்வே நாட்டின் ஸ்வால்பார்ட் பகுதியில் ஸ்பிட்ஸ்பர்கன் தீவில் உள்ள நை-அலெசுண்ட் ஆகியவையாகும்.

 

சுத்தமான காற்று உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமானது என்பதால் இத்தீவிலிருந்து கொள்முதல் செய்த காற்று என் விளம்பரம் செய்து ‘டஸ்மேனிய காற்று’ என பெயரிட்டு பாட்டில்களில் இக்காற்றினை அடைத்து வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...