13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

Date:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 147 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

இதனால் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களம் இறங்கியது. டு பிளிஸ்சிஸ், விராட் கோலி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். விராட் கோலி முதல் ஓவரில் 2 சிக்சர்கள் விளாசினார். அடுத்த ஓவரில் இருந்து டு பிளிஸ்சிஸ் அதிரடியை தொடங்கினார். 2-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் அடித்தார்.

3-வது ஓவரில் டு பிளிஸ்சிஸ் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். இதனால் 3 ஓவரில் ஆர்சிபி 46 ரன்கள் சேர்த்தது. 4-வது ஓவரில் 4 பவுண்டரிகள் விளாசினார்.

5-வது ஓவரில் விராட் கோலி இரண்டு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரின் கடைசி பந்தில் 1 ரன் எடுத்து டு பிளிஸ்சிஸ் 18 பந்தில் அரைசதம் அடித்தார். 6-வது ஓவரின் 5-வது பந்தில் டு பிளிஸ்சிஸ் 23 பந்தில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த வில் ஜேக்ஸ் 1 ரன்னிலும், ரஜத் படிதர் 2 ரன்னிலும், மேக்ஸ்வெல் 4 ரன்னிலும், க்ரீன் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் ஆர்சிபி 9.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்திருந்தது.

92 ரன்னுக்கு விக்கெட் இழக்காத ஆர்சிபி 111 ரன்னுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இருந்தபோதிலும் விராட் கோலி ஆட்டமிழக்காமல் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார்.

6-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். விராட் கோலி 27 பந்தில் 42 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது ஆர்சிபி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்திருந்தது. வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது.

தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடினார். இதனால் பெங்களூரு அணி வெற்றியை நோக்கி சென்றது. தினேஷ் கார்த்திக் சிறப்பாக விளையாட ஆர்சிபி 13.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தினேஷ் கார்த்திக் 12 பந்தில் 21 ரன்களுடனும், ஸ்வப்னில் சிங் 9 பந்தில் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் டைட்டன்ஸ் அணி சார்பில் ஜோசுவா லிட்டில் 4 விக்கெட் வீழ்த்தினார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...