உலக கிணத்திற்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

Date:

நியூசிலாந்து குடும்ப உறுப்பினர்களை கொண்டு உலகக் கிண்ண தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள அழகான வீடியோ ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 5ஆம் திகதி முதல் நொவம்பர் மாதம் 19ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 45 லீக் போட்டிகள் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலகக் கிண்ண தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட அணிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இன்று நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்ட முறை தான் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகக் கிண்ண அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களின் குடும்ப உறுப்பினர்களை கொண்டு நியூசிலாந்து வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் கிரிக்கெட் வீரர்களின் மனைவி, குழந்தைகள், தாய் உள்ளிட்டோர் தங்கள் வீரரின் பெயரை கூறுகின்றனர்.

நியூசிலாந்து கிரிக்கெட் சபை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோ ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த முறை  உலகக் கிண்ணத்தை பறிகொடுத்த நியூசிலாந்து அணி, இம்முறை இந்தியாவில் வெல்ல தயாராகியுள்ளது.

குறிப்பாக ஐபிஎல் தொடரின் போது காயமடைந்த கேன் வில்லியம்சன் தலைவராக அணிக்கு திரும்பியுள்ளார்.

இதனால் டொம் லேதம் துணை தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணி விபரம் Kane Williamson (c), Tom Latham (vc & wk), Devon Conway (wk), Glenn Phillips (wk), Trent Boult, Tim Southee, Mitchell Santner, Jimmy Neesham, Daryl Mitchell, Will Young, Mark Chapman, Rachin Ravindra, Lockie Ferguson, Ish Sodhi, Matt Henry.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...