ஐசிசி ஒருநாள் தரவரிசை ஆஸ்திரேலியா முதலிடம்

Date:

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையை வெளியிட்டது. இதில், இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா தனது புள்ளிப்பட்டியலில் 113-ல் இருந்து 118 ஆக உயர்த்தி முதல் இடத்தில் உள்ளது.

பாகிஸ்தான் (116 ரேட்டிங்) மற்றும் இந்தியா (115 ரேட்டிங்) ஆகியவற்றில் 2-வது மற்றும் 3-வது இடங்களில் உள்ளன. பாகிஸ்தான் 3-வது இடத்தில் தான் இருந்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்ததை தொடர்ந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி நியூசிலாந்து 5 டி20, 3 ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. டி20 தொடரில் இரு அணிகளும் தலா 2 வெற்றிகளை பெற்றது.

ஓர் ஆட்டத்தில் முடிவில்லை. இதனால், டி20 தொடர் சமன் ஆனது. ஒருநாள் கிரிக்கெட் தொடரை பொறுத்தமட்டில், பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் நியூசிலாந்து வீழ்த்தியது. நியூசிலாந்து 104 ரேட்டிங்குடன் 4-வது இடத்திலும், இங்கிலாந்து 101 ரேங்கிங்குடன் 5-வது இடத்திலும் உள்ளன.

தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன

 

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...