ஓமானில் தொழில் பெற்றுத்தருவதாக நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

Date:

ஓமானில் தொழில் பெற்றுத்தருவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் மட்டக்களப்பில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஓமானில் தொழில்வாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி, இரண்டு பேரிடம் இருந்து 9 இலட்சம் ரூபாவுக்கும் அதிக நிதியினை சந்தேகநபர், பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த இரண்டு நபர்களும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளும், மட்டக்களப்பு காவல்துறையினரும் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, அவர் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கைதானவர் மட்டக்களப்பு அமிர்தகழி பகுதியைச் சேர்ந்தவராவார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர், இன்று மட்டக்களப்பு நீதிவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரண்டு வழக்குகளை ஆராய்ந்த நீதிவான் அவரை, தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியுடைய இரண்டு சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...