கிரிமியா பாலம் மீது மீண்டும் தாக்குதல்

Date:

உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 509வது நாளாக நீடித்து வருகிறது. இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷியா தன் நாட்டோடு இணைத்துக்கொண்டது. உக்ரைனுடனான போரில் கிரிமியாவில் இருந்து ரஷிய படைகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷியாவையும் கிரிமியாவையும் கிரிச் பாலம் இணைக்கிறது.

அதேவேளை, 19 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலத்தில் ரெயில், சாலை போக்குவரத்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் கடந்த ஆண்டு பாலம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாக உக்ரைன், ரஷியா மாறி மாறி குற்றஞ்சாட்டிக்கொண்டன. அதன் பின்னர் பாலத்தை ரஷியா மீண்டும் சரி செய்து வாகனப்போக்குவரத்தை தொடர்ந்தது.

இந்நிலையில், ரஷியா – கிரிமியா இணைப்பு பாலம் கிரிச் மீது இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் ஆளில்லா விமானங்கள் பாலம் மீது தாக்குதல் நடத்தியதாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இந்த தாக்குதலால் பாலத்தின் மீதான போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலம் வழியாக ரஷியா ராணுவத்திற்கு தேவையான பொருட்களை அனுப்பப்பட்டு வந்ததால் அந்த நடவடிக்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் உக்ரைன் – ரஷியா இடையேயான போர் மேலும் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...