டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 167 ரன்கள் குவிப்பு

Date:

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்துள்ளது.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி டெல்லி கேபிடல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் டெவோன் கான்வே ஆகியோர் களத்தில் இறங்கினர். கடந்த சில போட்டிகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே, இந்த போட்டியில் 10 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.

மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 18 பந்துகளில் 24 ரன்களும், அடுத்து வந்த அஜிங்யா ரஹானே 20 பந்துகளில் 21 ரன்களும் எடுத்தனர். ரன் வேகம் மந்தமாக இருந்த நிலையில் ஷிவம் துபே 3 சிக்சர்களை விளாசி ரன் குவிப்பை வேகப்படுத்தினார்.

12 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து துபே ஆட்டமிழக்க அம்பதி ராயுடு 23 ரன்கள் சேர்த்தார். 7 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த கேப்டன் தோனியும், ரவிந்திரா ஜடோஜாவும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். கலீல் அகமது வீசிய ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 2 சிக்சர்களை பறக்க விட்டார் தோனி.

16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து ஜடேஜாவும், 9 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்து தோனியும் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த சென்னை அணி 167 ரன்கள் சேர்த்துள்ளது. இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று எளிதான இலக்கை நோக்கி டெல்லி அணி வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...