திரிமான்னேவின் ராஜினாமா கடிதம் ஏற்பு: இலங்கை கிரிக்கெட் சிஇஓ புகழாரம்

Date:

இலங்கை கிரிக்கெட் வீரர் லஹிரு திரிமான்னேவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக சிஇஓ ஆஷ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் இடக்கை துடுப்பாட்ட வீரரான லஹிரு திரிமான்னே சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடித்தை இலங்கை கிரிக்கெட் நிர்வாகத்திடம் அளித்தார்.

34 வயதாகும் லஹிரு திரிமான்னே 127 ஒருநாள் போட்டிகள், 44 டெஸ்ட் மற்றும் 26 டி20 போட்டிகளில் 5,543 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் செயற்குழு கூட்டத்தின்போது திரிமான்னேவின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

திரிமான்னேவின் ஓய்வு குறித்து சிஇஓ ஆஷ்லி டி சில்வா கூறுகையில், ‘திரிமான்னேவின் எதிர்கால முயற்சிகளில் சிறந்து விளங்க வாழ்த்துவதற்கு இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம்.

மேலும் அனைத்து வகையான விளையாட்டுகளையும் உள்ளடக்கிய இலங்கை கிரிக்கெட்டுக்கு அவர் ஆற்றிய சேவைகள் நினைவுகூரப்படும்’ என தெரிவித்துள்ளார்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...