தீவிரமடையும் மோதல் ; கனடாவிற்கான விசா சேவையை நிறுத்தியது இந்தியா

Date:

கனேடிய பிரஜைகளுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக அறிவித்துள்ளது.

கனடாவில் சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசாங்கத்திற்கு சம்பந்தம் இருப்பதாக கனடா அரசு பகிரங்கமாக குற்றம் சாட்டியது.

இதற்கு இந்திய அரசாங்கம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன், சமீபத்தில் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கனடாவுக்கு செல்லும் இந்தியர்கள் மற்றும் அங்கு வாழும் இந்தியர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்தியா தெரிவித்தது.

ஆனால் இந்தியாவின் இந்த குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்த கனடா பொது பாதுகாப்பு அமைச்சர், கனடா ஒரு பாதுகாப்பான நாடு என்று தெரிவித்தார்.

இந்நிலையில் கனேடிய நாட்டு மக்களுக்கான விசா சேவையை இந்தியா தற்காலிகமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது.

இருநாடுகளுக்கு இடையே ராஜங்க மோதல் அதிகரித்து வரும் நிலையில் செயல்பாட்டு காரணங்களுக்காக விசா சேவையானது நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...