தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய் !

Date:

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட 35 சிறுவர்கள் தற்போது கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதன் பணிப்பாளர் வைத்தியா் ஜி. விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

அவா் மேலும் கருத்து தொிவிக்கையில், இன்னும் நாடளாவிய ரீதியில் டெங்கு பரவி வருகின்றது. இது குறைவதை காண முடியவில்லை.

சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையை எடுத்துக்கொண்டாலும் சுமார் 35 நோயாளிகள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 நோயாளிகள் வைத்தியசாலைக்கு வருகின்றனர். நாளொன்றுக்கு சுமார் 7 பேர் ஹீமோபிலியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆனால், இந்த நோய் விரைவில் குறையும் என நம்புவது கடினமாக உள்ளது.இதனால் மழையுடனான வானிலை மேலும் பரவி வருவதால், சுற்றுச்சூழலையும், வீட்டுச் சூழலைம் சுத்தமாக வைத்திருக்க மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என வைத்தியா் ஜி.விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சரியான முறையில் கட்டுப்படுத்தப்படாவிட்டால், வரலாற்றில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவான ஆண்டாக இந்த வருடம் மாறும் அபாயம் உள்ளதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவதை அவதானிக்க முடியாத நிலையே இதற்கு காரணம் என அதன் தலைவர் நிஜித் சுமனசேன தெரிவித்துள்ளாா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...