நிதி அமைச்சின் அறிக்கைக்காக காத்திருக்கும் அரசாங்கம்!

Date:

பல பில்லியன் ரூபா பெறுமதியான வாகன இறக்குமதி மோசடி தொடர்பான விசாரணையில் நிதி அமைச்சின் அறிக்கைக்காக, அரசாங்கம் காத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையை நிதியமைச்சு சமர்ப்பிக்கும் என எதிர்பார்ப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதித் தடைக்கு மத்தியிலும் சட்டவிரோதமாக வாகனங்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பிலேயே இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுமார் 5 ஆயிரம் வாகனங்கள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, அதன் மூலம் அரசாங்கத்திற்கு பல பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...