நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது இந்தியா…!

Date:

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ – நேபாளம் ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய நேபாள அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 167 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

நேபாளம் தரப்பில் ரோகித் 65 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில்நிஷாந்த் சிந்து 4 விக்கெட்டும், ராஜ்வர்தன் ஹங்கார்கேகர் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தரப்பில் அபிஷேக் சர்மா, சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மா 87 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இறுதியில் இந்திய அணி 22.1 ஓவர்களில் 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 172 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இறுதிவரை களத்தில் இருந்த சாய் சுதர்சன் 58 ரன்னும், துருவ் ஜூரெல் 21 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தான் ஆடிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...