பரபரப்பான போட்டி.. 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா

Date:

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த ஒரே டெஸ்டில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை முதல்முறையாக தோற்கடித்து வரலாறு படைத்தது. தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி ஆஸ்திரேலிய அணியின் வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் எல்லிஸ் பெர்ரி ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தினார். மற்ற வீராங்கனைகள் தீப்தி சர்மா பந்து வீச்சில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். போட்டி முடிவில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதைத் தொடர்ந்து 259 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணிக்கு யாஸ்திகா பாட்டியா மற்றும் ஸ்மிருதி மந்தனா முறையே 14 மற்றும் 34 ரன்களை எடுத்து சுமாரான துவக்கத்தை கொடுத்தனர். அடுத்து களமிறங்கிய ரிச்சா கோஷ் பொறுப்பாக விளையாடி 96 ரன்களை குவித்தார். இவருடன் விளையாடிய ரோட்ரிக்ஸ் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி கடைசி ஓவரில் எட்டி விக்கெட்டுகளை இழந்து 255 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய சதர்லாந்து மூன்று விக்கெட்டுகளையும், ஜார்ஜியா வார்ஹெம் 2 விக்கெட்டுகளையும், ஆஷ்லி கார்ட்னர், டார்சி பிரவுன் மற்றும் அலானா கிங் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிசிசிஐ புறக்கணித்த நிலையில் கேஎல் ராகுல் குறித்து எல்எஸ்ஜி டுவிட் பதிவு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20...

ஸ்டாயினிஸ் அதிரடி- மும்பையை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்...

மீண்டும் வருகிறது Nokia 3210

கடந்த 1999 ம் ஆண்டு Nokia 3210 மொபைல் போன் வெளியானது....

விளையாட்டு வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்கு நல்லது – குரங்கு பெடல் டிரைலர்

சிவகார்த்திகேயன் தற்பொழுது அமரன் மற்றும் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் திரைப்படத்திலும் நடித்து...