பிரபல ஐரோப்பிய நட்சத்திர வீரர் திடீர் மறைவு: கண்ணீரில் கால்பந்து உலகம்

Date:

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் முக்கிய வீரரான Violeta Mitul விபத்தில் சிக்கி மரணமடைந்த சம்பவம் மொத்த கால்பந்து ரசிகர்களையும் கண் கலங்க வைத்துள்ளது.

மால்டோவா மகளிர் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனையான 26 வயது Violeta Mitul தமது தேசிய அணிக்காக 40 முறை களமிறங்கியுள்ளார். இந்த நிலையில் செப்டம்பர் 4ம் திகதி தமது சக கால்பந்து வீராங்கனை ஒருவருடன் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர் விபத்தில் சிக்கி மரணமடைந்துள்ளார்.

அவரது மரணம் தொடர்பில் கால்பந்து அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் வீரர், சக வீரர் மற்றும் நண்பரின் திடீர் மரணத்தை எங்கள் இதயங்களில் ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.

ஐஸ்லாந்து பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், Vopnafjörður இல் உள்ள மெரினாவில் பெண் ஒருவர் மலை முகட்டில் இருந்து தவறி விழுந்தார் என்ற தகவல் வந்துள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் சம்பவம் நடந்த பகுதிக்கு அவசர மருத்துவ உதவிக்குழுவினர் விரைந்த நிலையில் அவர் மரணமடைந்திருந்தார் என்றே கூறப்படுகிறது. 26 வயதேயான Violeta Mitul ஐரோப்பாவின் பல நாடுகளில் விளையாடியுள்ளார் என்றே கூறுகின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...