பெறுமதி சேர் வரி நீக்கம்

Date:

இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை (SVAT) எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இரத்துச் செய்தல் உள்ளிட்ட 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச் சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பெறுமதி சேர் வரியை மீளச் செலுத்தக்கூடிய வலுவான முறைமையொன்று இன்மையால் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையை இரத்துச் செய்தால் தற்போது குறித்த முறைமையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு, குறிப்பாக ஏற்றுமதியாளர்களுக்கு மோசமான காசுப்பாய்ச்சல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுமென குறித்த தரப்பினரால் முன்மொழிவுள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அதனால், வலுவான முறைமையொன்று உருவாக்கப்படும் வரைக்கும் இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமை இரத்துச் செய்தல் படிபடிமுறையாக மேற்கொள்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டமூலம் தொடர்பாக பாராளுமன்ற குழுநிலை விவாதத்தின் போது இலகுபடுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி முறைமையைஇரத்துச் செய்தல் தொடர்பான ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் திகதி 01.04.2025 என திருத்துவதற்கான முன்மொழிவைச் சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...