பொறுமையின் எல்லையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு

Date:

எதிா்வரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழ் மக்களின் அரசியல் தீா்வுக்கான பேச்சுவாா்த்தை ஒரு கட்டத்தை அடையும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளாா்.

குறித்த கால இடைவௌிக்காக காத்திருப்பதாக தொிவித்த அவா், தமிழ் மக்களின் அரசியல் தீா்வு தொடா்பில் பொறுமையின் எல்லையில் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தனால் ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளாா்.

இந்த சந்திப்பில் காணிவிடுவிப்பு தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பாகவும், தேர்தல் தொடர்பாகவும், சிறையில் இருக்கும் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன் தொிவித்துள்ளாா்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...