மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் செய்த உத்தியோகத்தர்

Date:

மட்டக்களப்பு நகரில் மதுபோதையில் மனைவி, மகனை தாக்கிய கணவருக்கு எதிராக பொலிஸ் நிலையம் சென்ற மனைவி, மகனை அங்கு சென்று கலவரம் ஏற்படுத்திய பிரதேச செயலகம் ஒன்றில் கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவரை மதுபோதையில் நேற்று (21) கைது செய்துள்ளதாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரிய வருவதாவது,

மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த பிரதேச செயலகம் ஒன்றில் அபிவிருத்தி உத்தியோகத்தாரக கடமையாற்றி வரும் ஒருவர் சம்பவதினமான நேற்று (21) மதுபோதையில் மனைவி மகன் மீது தாக்கியுள்ளார்.

இதனையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பி பொலிஸ் நிலையம் போவதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்துக்கா செல்லுகின்றீர்கள் நானும் வாரேன் அங்கு இரண்டில் ஒன்று பார்ப்பதாக கணவர் அவர்களை பின் தொடர்ந்து பொலிஸ் நிலையத்துக்குள் சென்று அங்கு பெரும் கலவரம் ஏற்படுத்தியதையடுத்து அவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை வைத்தியசாலையில் அனுமதித்து மதுபோதை பாவித்தாரா என உறுதிபடுத்திய பின்னர் அவருக்கு எதிராக குற்றவியல் சட்டகோவை 1979 ஆம் ஆண்டு 4 ஆம் பிரிவின் கீழ் மதுபோதையில் பொலிஸ் நிலையத்தில் கலவரம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று (21) மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன்போது அவரை 2,500 ரூபா அபதாரம் செலுத்துமாறும் 25,000 ரூபா கொண்ட ஒரு வருட நன்னடத்தை பிணையில் செல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு

விடாமுயற்சியை அடுத்து நடிகர் அஜித்தின் ஏகே 63 படத்தை ஆதிக் ரவிச்சந்திரன்...

தகாத உறவை கண்டித்தால் சிக்கன் ரைஸில் விஷம்

நாமக்கல் பஸ் நிலையம் எதிரில் ஜீவானந்தம் (வயது 32) என்பவர் ஓட்டல்...

டி20 உலகக் கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க...

ஸ்டார்க் வேகத்தில் வீழ்ந்த மும்பை- 24 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா...