பிரபல பாப் இசை பாடகி 5 கண்டங்களில் நிகழ்த்த உள்ள அதிசயம்

Date:

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விப்ட். 33 வயதான இவர் கிராமி விருதை வென்றுள்ளார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த தனது இசை சுற்றுப்பயணத்தை சமீபத்தில் தொடங்கினார்.

5 கண்டங்கள், 17 மாநிலங்களில் 131 இசை நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அவர் திட்டமிட்டுள்ளார். இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில், கொரோனாவுக்கு பிறகு முடங்கிய பொருளாதாரம் மீண்டு வருவதாக ஏற்கனவே பல்வேறு பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இசைத்துறை மூலம் பாப் கலாசாரம், பொருளாதாரம் என அனைத்திலும் டெய்லர் ஸ்விப்ட்டின் தாக்கம் குறித்து முதல் கல்வி கருத்தரங்கை ஆஸ்திரேலியா நடத்த உள்ளது. அடுத்தாண்டு (2024) பிப்ரவரி 11-திகதி முதல் 13-திகதி வரை மெல்போர்ன் பல்கலைக்கழகத்திலும், ஆன்லைன் வழியாகவும் இந்த கருத்தரங்கம் நடைபெற உள்ளது. இது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்பட 7 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அறிஞர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...

நடப்பு ஐபிஎல் தொடரில் 1,125 சிக்சர்கள்: கடந்த ஆண்டு சாதனை முறியடிப்பு

ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது...