மும்பை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது குஜராத் டைட்டன்ஸ்

Date:

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து குஜராத் அணியின் பேட்ஸ் மேன்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் ரிதிமன் சாஹா அர்ஜுன் டெண்டுல்கர் வேகத்தில் இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து 4 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 13 ரன்னும், விஜய் சங்கர் 19 ரன்னும் எடுத்தனர்.

பொறுப்புடன் விளையாடிய தொடக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 22 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் மில்லர் 46ரன்களும், 21 பந்தில் அபினவ் மனோகர் 42 ரன்களும், 5 பந்துகளில் 3 சிக்சர்களுடன் ராகுல் தெவாட்டியா 20 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த குஜராத் டைட்டன்ஸ் அணி 207 ரன்களை எடுத்தது. இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் களத்தில் இறங்கினர். கேப்டன் ரோஹித் சர்மா 8 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 21 பந்துகளை சந்தித்த இஷான் கிஷன் 13 ரன்னிலும் திலக் வர்மா 2 ரன்னிலும் விக்கெட்டை பறி கொடுத்தனர்.

கேமரூன் கிரீன் 33 ரன்கள் சேர்க்க, அதிரடியாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 23 ரன்கள் எடுதது ஆட்டமிழந்தார். மும்பை அணியின் முன்வரிசை மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததால் 11 ஓவரிலேயே அந்தஅணி தோல்வி முகத்தை கண்டது. 10.4 ஓவரில் மும்பை அணி முதல் 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

கடைசி சில ஓவர்களில் அதிரடியாக விளையாடிய நெஹல் வதேரா 21 பந்தில் 40 ரன்னும், பியூஷ் சாவ்லா 18 ரன்னும், அர்ஜுன் டெண்டுல்கர் 13 ரன்னும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணியால் 152 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்து 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. குஜராத்அணியில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், ரஷித் கான், மோகித் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...