யாழ். வைத்தியசாலையில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பு

Date:

யாழ். போதனா வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெறும் நோயாளர்களை பார்க்க வரும் உறவினர்கள் போதை மாத்திரைகள், மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களை எடுத்து வருகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டீ.சத்யமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்களின் பயணப் பைகளை சோதனையிடுகையிலேயே இவ்வாறு போதைப்பொருட்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

வைத்தியசாலைக்குள் போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய, வைத்தியசாலையின் பாதுகாப்பு அதிகாரிகள் மூலம் இப்பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, 3 மதுபான போத்தல்கள்;, ஒருதொகை போதைப்பொருள் மற்றும் போதை கலந்த வெற்றிலை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...