ரவீந்திரா, நீஷம் போராட்டம் வீண்.. 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா திரில் வெற்றி

Date:

உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடரின் 27-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் அதிரடியான துவக்கத்தை கொடுத்தனர். இருவரும் முறையே 81 மற்றும் 109 ரன்களை குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த மிட்செல் மார்ஷ் 36 ரன்களையும், ஸ்மித் மற்றும் லபுஷேன் தலா 18 ரன்களை அடித்து ஆட்டமிழந்தனர். மேக்ஸ்வெல் 41 ரன்களில் பெவிலியன் திரும்ப, இங்லிஸ் 38 ரன்களை அடித்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 49.2 ஓவர்களில் 388 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நியூசிலாந்து சார்பில் கிளென் பிலிப்ஸ், போல்ட் தலா 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் 2 விக்கெட்டுகளையும், நீஷம், மேட் ஹென்றி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடின இலக்கை துரத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய டெவான் கான்வே 28 ரன்களையும், யங் 32 ரன்களையும் குவித்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி 89 பந்துகளில் 116 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய டேரில் மிட்செல் 54 ரன்களையும், கேப்டன் டாம் லேத்தம் 21 ரன்களையும் எடுத்தனர்.

இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 12 ரன்களில் ஆட்டமிழக்க ஜேம்ஸ் நீஷம் பொறுப்பாக ஆடி அரைசதம் விளாசினார். மிட்செல் சாண்ட்னர் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகளை இழந்து 383 ரன்களை குவித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியா அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நான் ஹீரோ இல்ல… அவர்தான் ஹீரோ – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில், நடிகர்...

அடுத்த வருடம் மே மாதம் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை நடத்த திட்டம்

இந்தியா ஐபிஎல் டி20 லீக் தொடரை நடத்துவது போல் பாகிஸ்தானும் பிஎஸ்எல்...

டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது- ஷேன் வாட்சன்

வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான...

13.4 ஒவரில் இலக்கை எட்டி ஆர்சிபி அபார வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பெங்களூரு...