லியோ படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்

Date:

மாஸ்டர் படத்திற்கு பின் நடிகர் விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. காஷ்மீரில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மிஷ்கின், அர்ஜூன், மன்சூர் அலிகான், அபிராமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் ஆயுதப்பூஜையையொட்டி வரும் அக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீரில் நடக்கும் படப்பிடிப்பில் ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இணைந்துள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் விமானத்தில் சஞ்சய் இறங்கியது, அவரை படக்குழுவினர் வரவேற்றது, பின்னர் பட செட் அருகே உள்ள ஓட்டலில் விஜய், லோகேஷ் உள்ளிட்டோர் வரவேற்று பேசுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோவை ரசிகர்கள் வரவேற்று டிரெண்ட் செய்தனர்.

அந்த வீடியோவில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் உள்ளார். அவரது தலைமுடி பார்க்கவே வித்தியாசமாக உள்ளது. சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் இருக்கும் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

“எலெக்ஷன்” படத்தின் 2வது சிங்கிள் வெளியானது

'உறியடி', 'பைட் கிளப்' உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் விஜயகுமார்...

குபேரா படத்தில் நாகர்ஜூனா ஃபர்ஸ்ட் லுக் – மாஸ் வீடியோ வெளியீடு

தனுஷ் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் புதிய படம் குபேரா....

வெற்றிக்கு ‘தல’ தான் காரணம் – சென்னையை கிண்டல் செய்த பஞ்சாப்!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்...

4 சுழற்பந்து வீச்சாளர்கள் ஏன்? டுவிஸ்ட் வைத்த ரோகித் சர்மா

டி20 உலகக் கோப்பை ஜூன் 1-ந் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான இந்திய...