ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்!

Date:

சிம்பாப்வே கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ஹீத் ஸ்ட்ரீக் இன்று (03) தனது 49 ஆவது வயதில் காலமானார்.

பெருங்குடல் மற்றும் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹீத் ஸ்ட்ரீக் 2000 முதல் 2004 ஆம் ஆண்டு வரை சிம்பாப்வே அணியின் தலைவராக செயற்பட்டார்.

மேலும் சிம்பாப்வே அணிக்காக 65 டெஸ்ட் போட்டிகளிலும் 189 ஒருநாள் போட்டிகளிலும் இவர் விளையாடியுள்ளார்.

அத்துடன் சிம்பாப்வே அணி சார்பில் 100 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே ஒரு வீரர் என்ற பெருமையையும் இவர் தன்வசப்படுத்தியிருந்தார்.

பந்துவீச்சில் மாத்திரமன்றி துடுப்பாட்டத்திலும் சிம்பாப்வே அணிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.

இவர் டெஸ்ட் போட்டிகளில் 1990 ஓட்டங்களையும் ஒருநாள் போட்டிகளில் 2934 ஓட்டங்களையும் சிம்பாப்வே அணிக்காக பெற்றுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...