தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராற்றில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று (19) இரவு இராமநாதபுரம், கல்மடு நகரில் பதிவாகியுள்ளது.
படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30 மற்றும் 50 வயதுடைய மூன்று பெண்களுமே இவ்வாறு காயமடைந்துள்ள நிலையில், இவர்கள் பளை மற்றும் வவுனியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
தகாத உறவினால் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டதில் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி மற்றும் வட்டக்கச்சி பிரதேசத்தில் வசிக்கும் 24, 33 மற்றும் 59 வயதுடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.