‘ஆயிரத்தில் ஒருவன் 2’ கேட்கும் மோகன்ஜி

Date:

‛திரௌபதி, பகாசூரன்’ படங்களை இயக்கியவர் மோகன்ஜி. ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்துடன் படங்களைக் கொடுப்பதாக அவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. ‘பகாசூரன்’ படத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.

செல்வராகவன் இயக்கிய ‘புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்’ ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைப்பார்கள். அந்த இரண்டு படங்களும் வியாபார ரீதியாக வெற்றிப் படங்களாக அமையவில்லை என்றாலும் இன்று வரை பேசப்படும் படங்களாக இருக்கின்றன.

கடந்த 2021ல் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க போவதாக செல்வராகவன் அறிவித்தார். அறிவிப்போடு மட்டுமே உள்ள இந்தப்படம் அதன்பின் டேக்-ஆப் ஆகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் மோகன்ஜி, “கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள். இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ…” என சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களை சாடியுள்ளார்.

வேறொரு இயக்குனரின் படத்திற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்க அந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மோகன்ஜி கேட்டுள்ளார். அதே சமயம் அவரிடமே ஒரு ரசிகர், “நீங்கள் எப்போது திரௌபதி 2′ எடுக்க போறிங்க,” எனக் கேட்டுள்ளார்.

மோகன் ஜி குறிப்பிடுவதை பார்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை என தெரிகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...