MOP உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைக்க அவதானம்!

Date:

இந்த வருடம் நெற்செய்கைக்கான MOP உரத்தின் விலையை 4500 ரூபாவினால் குறைக்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விடயம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதாகவும், தற்போது சந்தையில் எம்ஓபி உரத்தின் 50 கிலோகிராம் மூடை 18,500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதால் அந்தத் தொகையை விவசாயிகளுக்கு ஏற்க சிரமமாக இருப்பதால் விலையைக் குறைக்கத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த வாரம் கூடவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

குறைந்த விலையில் உரங்களை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் செயற்பட்டு வருவதால், இரசாயன உர விற்பனை தொடர்பில் சந்தையில் போட்டி உருவாகியுள்ளதோடு, இதன் மூலம் விவசாயிகள் பயனடைவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

யூரியா உரத்தின் விலை குறைவடைந்துள்ளதால், எதிர்காலத்தில் TSP மற்றும் MOP ஆகிய உரங்களின் விலை மேலும் குறையும் என தனியார் துறை உர விற்பனையாளர்கள் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.


Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...