27 ரன்ஸ்.. சிஎஸ்கேவை வீட்டுக்கு அனுப்பிய ஆர்சிபி.. 15 நாளில் உலக சாதனையுடன் வரலாற்றின் மாஸ் கம்பேக்

Date:

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் மே 18ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பெங்களூரு நகரில் 68வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் பெங்களூருவுக்கு எதிராக டாஸ் வென்ற நடப்பு சாம்பியன் சென்னை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பெங்களூரு அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி அதிரடியாக விளையாடி 78 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 47 (29) ரன்களில் அவுட்டானார்.

அடுத்த சில ஓவரில் அவருடன் சேர்ந்து விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் அரை சதமடித்து 54 (39) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே போல மறுபுறம் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கிய ரஜத் படிடார் 41 (23) ரன்கள் விளாசி அவுட்டானார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 14 (6), கிளன் மேக்ஸ்வெல் 16 (5) ரன்களில் அவுட்டானாலும் கேமரூன் கிரீன் 38 (17) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

ஆர்சிபி கம்பேக்:
அதனால் 20 ஓவரில் பெங்களூரு 218/5 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை சார்பில் அதிகபட்சமாக சர்துள் தாகூர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 219 ரன்களை துரத்திய சென்னைக்கு முதல் ஓவரிலேயே கேப்டன் ருதுராஜ் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த டேரில் மிட்சேல் 4 (6) ரன்களில் நடையை கட்டினார். அதனால் 19/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய சென்னைக்கு மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் ஜோடி சேர்ந்த ரகானே மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து 33 (22) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரவீந்தரா அரை சதமடித்து 61 (37) ரன்கள் விளாசி வெற்றிக்கு போராடிய போது துபேவுடன் ஏற்பட்ட தவறான புரிதலால் ரன் அவுட்டானார். அவருக்கு அடுத்த ஓவரிலேயே மறுபுறம் திணறிய துபேவும் 7 (15) ரன்னில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதால் சென்னை தோல்வியின் பிடியில் சிக்கியது.

அப்போது ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். அதனால் வெற்றியை நெருங்கிய சென்னைக்கு யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவரில் ரன்ரேட் அடிப்படையில் 17 ரன்கள் தேவைப்பட்டபோது முதல் பந்தில் சிக்சர் அடித்த தோனி அடுத்த பந்தில் 25 (13) ரன்களில் அவுட்டானார். இறுதியில் ரவீந்திர ஜடேஜா 42* (22) ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 192/7 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது.

அதனால் 27 ரன்கள் வித்யாசத்தில் அபார வெற்றி பெற்ற பெங்களூரு நடப்பு சாம்பியன் சென்னையில் வீட்டுக்கு அனுப்பி வைத்து 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. குறிப்பாக ஆரம்பத்தில் 6 தோல்வி கண்டதால் புள்ளிப்பட்டியலில் மே 3ஆம் தேதி கடைசி இடத்தில் தவித்த பெங்களூரு முதல் அணியாக வெளியேறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அடுத்த 15 நாளில் தொடர்ந்து 6 வெற்றிகளை பெற்ற அந்த அணி தற்போது பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று மாஸ் கம்பேக் கொடுத்துள்ளது.

அத்துடன் இந்த போட்டியில் அடுத்த 16 சிக்ஸர்களையும் சேர்த்து ஒரு டி20 தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த தனியாக பெங்களூரு உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் இதே சீசனில் ஹைதராபாத் 146 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அப்பட்டியலில் 2018 சீசனில் 145 அடித்த சிஎஸ்கே 3வது இடத்தில் உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...

20 ஓவர் உலக கோப்பை: சூப்பர்-8 முதல் போட்டியில் தென்ஆப்பிரிக்கா-அமெரிக்கா மோதல்

20 ஓவர் உலக கோப்பை போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில்...

சென்னை-நாகர்கோவில் புதிய வந்தே பாரத் ரெயிலை தினசரி ரெயிலாக இயக்க முடிவு

சென்னையில் இருந்து தென் மாவட்டப் பகுதிகளுக்கு செல்லும் ரெயில்களும் அங்கிருந்து சென்னைக்கு...

நியூசிலாந்தை 75 ரன்னில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அசுர வெற்றி

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் கயனாவில் உளள்...