முதல் 7இல் வெறும் 1.. அடுத்த 7இல் 6.. கம்பேக்கில் மேஜிக் நிகழ்த்திய ஆர்சிபி.. வேறு யாரும் செய்யாத 2 சாதனை

Date:

உச்சக்கட்டத்தை தொட்டுள்ள ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரின் 68வது லீக் போட்டியில் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. மே 18ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு கேப்டன் டு பிளேஸிஸ் 54, விராட் கோலி 47 ரன்கள் எடுத்த உதவியுடன் 219 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆனால் அதைத் துரத்திய சென்னைக்கு கேப்டன் ருதுராஜ் 0, மிட்சேல் 3, சிவம் துபே 7 ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை ஏற்படுத்தினர் அதனால் ரச்சின் ரவீந்தரா 61, ரகானே 33, ரவீந்திர ஜடேஜா 42*, தோனி 25 ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 191/7 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை பரிதாபமாக தோற்றது. பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக யாஷ் தயாள் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

ஆர்சிபி மேஜிக்:
இந்த வெற்றியால் நடப்பு சாம்பியன் சென்னையை லீக் சுற்றுடன் வீட்டுக்கு அனுப்பிய பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சொல்லப் போனால் முதல் 7 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்ற அந்த அணி தொடர்ச்சியாக 6 தோல்விகளை சந்தித்தது. அதனால் மே 3ஆம் தேதி வரை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த பெங்களூரு கண்டிப்பாக முதல் அணியாக லீக் சுற்றுடன் நடையை கட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அப்போது வழக்கம் போல எதிரணி ரசிகர்கள் கால்குலேட்டரை எடுத்து பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்புள்ளதா என்பதை பாருங்கள் என்று ஆர்சிபி ரசிகர்களை கலாய்த்தனர். அந்த சமயத்தில் ஆர்சிபி அணி பிளே ஆப் செல்வதற்கு வெறும் 3% மட்டுமே வாய்ப்பிருந்தது. ஆனால் அந்த 3% வாய்ப்பையும் விடாத பெங்களூரு அணி அங்கிருந்து கொதித்தெழுந்து அதற்கடுத்த 7 போட்டிகளில் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்றது.

அதனால் சென்னை, மும்பை போன்ற வெற்றிகரமான அணிகளை பின்னுக்குத் தள்ளிய பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கும் தகுதி பெற்று வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை நிரூபித்துள்ளது. அத்துடன் ஐபிஎல் வரலாற்றில் முதல் 7 போட்டிகளில் வெறும் 1 வெற்றியை மட்டுமே பெற்று கடைசியில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் அணியாக பெங்களூரு சாதனை படைத்துள்ளது.

அதே போல ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட தொடரில் தொடர்ச்சியாக 6 தோல்விகளை பதிவு செய்து பின்னர் தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற தனித்துவமான சாதனையும் பெங்களூரு படைத்துள்ளது. இருக்கு முன் கடந்த 2010, 2020, 2022 சீசன்களில் முறையே டெக்கான் சார்ஜர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் தொடர்ச்சியாக 5 தோல்விகளை பெற்று பின்னர் 5 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றதே முந்தைய சாதனையாகும்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் திகதி அறிவிப்பு வெளியானது

ஜனாதிபதி தேர்தல் 2024 : வேட்புமனுக்கள் ஓகஸ்ட் 15 ஆம் திகதி...

அஜித்தை இயக்க போகும் கேஜிஎப் புகழ் பிரசாந்த் நீல்

கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி பிரபலமானவர் பிரசாந்த் நீல். அதையடுத்து...

இந்த விஷயம் என்னை பாதித்தது : ரஹ்மான் மகள் கதீஜா

சில்லு கருப்பட்டி, ஏலே' படங்களை இயக்கியவர் ஹலிதா ஷமீம். தற்போது இவர்...

பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளர்கள் இவர்கள் தானா? இணையத்தில் வைரலாகும் லிஸ்ட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக்...