இலங்கை அணி 03 விக்கெட்டுக்களால் வெற்றி!

Date:

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, டவ்ஹித் ஹ்ரிடோய் 96 ஓட்டங்களையும், சௌமியா சர்க்கார் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க 45 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்தநிலையில், 287 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.1 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக பெத்தும் நிஸ்ஸங்க 114 ஓட்டங்களையும், சரித் அசலங்க 91 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியின் டஸ்கின் ஹகமட் 49 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகலை அறிவித்தார் ரணில்

ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம்...

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...