டி20 உலகக் கோப்பை சூப்பர் 8-இல் இங்கிலாந்து அபார வெற்றி

Date:

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான பிரண்டன் கிங் 23 ரன்களும், சார்லஸ் 38 ரன்களும் எடுத்து அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். பிரண்டன் கிங் காயம் காரணமாக பாதியில் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன், கேப்டன் பவல் ஆகியோர் தலா 36 ரன்கள் எடுத்தனர். அதிரடி வீரர் ரசல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் ரூதர்போர்டு அதிரடி காட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 180 குவித்தது.

பிறகு 20 ஓவர்களில் 181 ரன்களை துரத்திய இங்கிலாந்து அணிக்கு துவக்க வீரர் பில் சால்ட் அதிரடியாக ஆடி 47 பந்துகளில் 87 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய கேப்டன் ஜாஸ் பட்லர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த மொயின் அலி 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ 26 பந்துகளில் 48 ரன்களை விளாசினார். இதன் மூலம் இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் வெறும் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை குவித்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ராஸ்டன் சேஸ் மற்றும் ஆண்ட்ரே ரசல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பதவி விலகினார் மஹேல!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசக பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து மஹேல ஜயவர்தன...

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கானை வீடியோ காலில் பாராட்டிய தலிபான் அமைச்சர்

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி...

டி20 போட்டிகளில் அதிக முறை 4 விக்கெட்: ரஷித் கான் புதிய சாதனை

டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின் கடைசி...

டி20 உலகக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய ஆப்கானிஸ்தான்

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த சூப்பர் 8 சுற்றின்...