வரலாற்று சாதனை படைத்த அமெரிக்க அணியில் முன்னாள் இந்திய வீரர்

Date:

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை சென்றது. சூப்பர் ஓவரில் பாகிஸ்தான் அணியை வீழ்த்திய அமெரிக்கா வரலாற்று சாதனையை பதிவு செய்தது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த அமெரிக்கா 1 விக்கெட் இழந்து 18 ரன்களை குவித்தது. அடுத்து வந்த பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழந்து 13 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது.

அமெரிக்கா வெற்றி பெற அந்த அணியின் சௌரப் நெட்ராவல்கர் முக்கிய பங்காற்றினார். சிறப்பாக பந்துவீசிய இவர் 4 ஓவர்களில் 18 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நேற்றைய போட்டியில் அபார வெற்றி பெற்றதை அடுத்து, சௌரப் நெட்ராவல்கர் இந்திய அணிக்காக விளையாடியது அம்பலமாகி இருக்கிறது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சௌரப் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். யு19 இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சௌரப் 2010-இல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களை பந்துவீசி 16 ரன்களை கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

அந்த வகையில், 14 ஆண்டுகள் கழித்து அணி மாறிய சௌரப் அமெரிக்க கிரிக்கெட் அணியில் களமிறங்கி டி20 உலகக் கோப்பை தொடரில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தோல்வியடைய முக்கிய காரணமாக விளங்கியுள்ளார்.

முன்னதாக, யு19 போட்டியில் இந்தியா தோல்வியுற்ற பாகிஸ்தான் அணியிலும் பாபர் அசாம் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போதைய போட்டியில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கள்ளச்சாராய உயிரிழப்பு 49-ஆக உயர்வு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்து இருக்கிறது....

சூப்பர் 8-இல் முதல் வெற்றி – 47 ரன்களில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்றிரவு நடைபெற்ற...

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8-இல் இங்கிலாந்து அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று காலை நடைபெற்ற சூப்பர் 8...

ஆப்கானிஸ்தானை அடித்து நொறுக்கிய வெஸ்ட் இண்டீஸ்.. 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

டி20 உலகக் கோப்பை தொடரின் 40-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட்...