காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு
காட்டு யானைகள் தாக்கியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். அம்பன்பொல பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நிகவலயாய பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, எஹெதுவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர். சடலம் தற்போது கல்கமுவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், எஹெதுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.