# Tags

சுற்றுலா சென்ற நான்கு இளைஞர்கள் மாயம்

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லாவல நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்குச் சென்ற நான்கு இளைஞர்கள் இன்று (21) காணாமல் போயுள்ளனர். அவர்கள் நால்வரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சுற்றுலா வந்த 10 இளைஞர்கள் அந்த நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்காகச் சென்ற நிலையில், நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளை சேர்ந்த 22 முதல் 23 வயதுக்குட்பட்ட நான்கு இளைஞர்களே காணாமல் போயுள்ளனர்.

கொடூரமாக தாக்கிய ஆசிரியருக்கு எதிராக சட்டநடவடிக்கை !

ஆசிரியர் ஒருவர் கடுமையாகத் தாக்கியதால் முழங்கால் ‘சில்’ பகுதி பாதிப்புக்குள்ளானதாகக் கூறப்படும் மாணவர் ஒருவருக்கு நியாயம் கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்குட்பட்ட பாலமுனை அல் ஹிக்மா பாடசாலையில் தரம் 09இல் கற்கும் ஐ. அப்துல் ஹாதிக் எனும் மாணவனே இவ்வாறு ஆசியரால் தாக்கப்பட்டதாக முறையிடப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை – குறித்த பாடசாலையில் வைத்து ஐ.எம். பஹாரி எனும் ஆசிரியர் தனக்கு […]