# Tags

மின்கட்டணத்தை குறைக்க தீர்மானம் !

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (08) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரும் தேசிய பட்டியலிலிருந்து பாராளுமன்றத்திற்கு வர தயாராகி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இரண்டு நாள் விவாதம் […]

தேர்தல் ஒத்திவைப்புக்கு எதிராக பாராளுமன்றில் விவாதம்

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற விவகாரக் குழுவில் இரண்டு நாள் விவாதம் கோரினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டமை தொடர்பில் நாட்டில் பலத்த எதிர்ப்பு நிலவி வருவதால், இது தொடர்பில் பரந்துபட்ட விவாதம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.