# Tags

பிறந்து 10 நாட்களேயான சிசு புகையிரதத்தில் இருந்து மீட்பு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரதத்தின் கழிவறையில் விடப்பட்ட சிசுவின் பெற்றோர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 26 வயதுடைய திருமணமாகாத இருவர் பண்டாரவளை மற்றும் கொஸ்லந்த பொலிஸ் நிலையங்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (10) இரவு 7 மணியளவில் மட்டக்களப்புக்கு புறப்படவிருந்த பாடுமீன் புகையிரதத்தில் விடப்பட்ட இந்த சிசுவை பயணிகளும் புகையிரத அதிகாரிகளும் கண்டெடுத்துள்ளனர். பின்னர் சிசுவின் பெற்றோரை கண்டறிய பொலிஸார் விசாரணை நடத்தி, கிடைத்த தகவலின்படி அவர்களை கண்டுபிடித்தனர். பண்டாரவளை நாயபெத்த மற்றும் கொஸ்லந்த பிரதேசத்தில் […]

வெளிநாட்டவரின் 7 இலட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் திருட்டு!

கண்டியிலிருந்து பண்டாரவளை நோக்கிப் பயணித்த நோர்வே நாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரின் ஏழு இலட்ச ரூபா பெறுமதியான உடைமைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. விலை உயர்ந்த ‘ட்ரோன்’ கெமரா உட்பட பல பொருட்கள் கொண்ட பயணப் பொதியே இவ்வாறு இனந்தெரியாதோரால் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவலப்பிட்டி ரயில் நிலையத்தில் ரயில் தரித்து நின்ற போது குறித்த பொதி திருடப்பட்டிருக்கலாம் என சுற்றுலாப் பயணி சந்தேகம் தெரிவித்துள்ளார். மேற்படி பயணப் பொதியில் 25 000 ரூபா பணம், […]