# Tags

பந்தயம் மற்றும் கேமிங் லெவி (திருத்தம்) அங்கீகரிக்கப்பட்டது

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்மொழியப்பட்ட பந்தயம் மற்றும் கேமிங் லெவி (திருத்தம்) சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதற்கமைவாக, சட்டமா அதிபரும் திருத்தத்திற்கான அனுமதியை வழங்கியதையடுத்து, அது தொடர்பான சட்டமூலத்தை வர்த்தமானியில் பிரகடனம் செய்து பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது. 1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க பந்தயம் மற்றும் கேமிங் லெவி சட்டத்திற்கான திருத்தம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் […]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கிலிருந்து ஜனாதிபதி விடுதலை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 108 பேர் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்மானத்தை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷ டி சில்வா அறிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததால், தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரி இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​ரணில் […]

தமிழரசு கட்சியின் செல்வாக்கினை கண்டு ஜனாதிபதி அஞ்சுகின்றார் – சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அச்சத்தில் உள்ளார் என்பது அவர் வெளியிட்டுள்ள புதிய வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வெளிப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். திருகோணமலையில் இன்று (28) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட சந்திப்பு ஒன்றில் பங்கேற்றிருந்தனர். இதன்போது குறித்த சந்திப்பில் பங்கேற்றிருந்த இலங்கை தமிழரசு கட்சியின் ஆதரவாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமைக்கான காரணம் தொடர்பிலும் இரா.சாணக்கியன் […]

இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா?

போராட்டத்தில் உயிர் நீத்த போராளியின் உயிருக்கு பதில் கூற வேண்டியதும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேணடியதும் இந்த அரசாங்கமும் ஜனாதிபதியுமே. அன்று கட்சி ஆதரவாளர்களை வைத்து போராட்டகாரர்களை தாக்கினார்கள். இன்று காவல் துறையை வைத்து தாக்குகின்றார்கள். இதுதான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஜனநாயகமா என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மக்கள் எதிர்ப்பு […]

நெல் கொள்வனவு, அரிசி உற்பத்தி மற்றும் விற்பனைக்கு வரி விலக்கு?

நெல் கொள்வனவு மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரியில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. நெல் கொள்முதல் மற்றும் அரிசி உற்பத்தி மற்றும் விற்பனையை சமூக பாதுகாப்பு பங்களிப்பில் இருந்து விடுவித்த பின்னர், விவசாயிகளிடம் இருந்து 100 ரூபாவுக்கு மேல் ஒரு […]