இந்த மாதம் சந்திரன், அடுத்த மாதம் சூரியன் – அடுத்த அதிரடிக்கு தயாரான இஸ்ரோ!

Date:

இதுவரை நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியில் உலகின் எந்த நாடும் வெற்றி பெற்றதில்லை. ஆனால், இம்முயற்சியில் இந்தியா வெற்றி பெற்று உலக நாடுகளை தன்பக்கம் திரும்பி பார்க்க செய்தது.

இந்த வெற்றிக்கு பிறகு, இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, சூரியனை ஆய்வு செய்வதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இது குறித்து இஸ்ரோ மையத்தின் மூத்த விஞ்ஞானி கூறும் போது, “சூரியனை ஆய்வு செய்ய விண்கலனை அனுப்பும் முதல் முயற்சியாக ஆதித்யா எல் 1 (Aditya L1) எனும் பெயரில் செப்டம்பர் 2-ம் திகதி அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து காலை 11:50 மணிக்கு விண்கலன் அனுப்பப்படும்,” என்று தெரிவித்தார்.

இத்திட்டத்தின் நோக்கப்படி, சூரியனில் உள்ள வாயு மண்டலம், சூரியனின் மத்திய பகுதியான கொரானாவின் வெப்பம், சூரிய வாயுவின் வேகம் மற்றும் தட்பவெப்ப மாறுதல்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். சூரிய மண்டலத்தில் லக்ரேஞ்சியன் புள்ளி என்ற இடத்தை அடைய முயற்சிப்பதே இதன் நோக்கங்களில் ஒன்று. இந்த திட்டத்திற்கு சுமார் ரூ.400 கோடி வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி. எக்ஸ்.எல். (PSLV-XL) ராக்கெட்டில் இந்த விண்கலன் சூரியனின் சுற்று வட்டப்பாதயை சென்று அடையும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.

சூரியனில் இருந்து அவ்வப்போது வெடி அதிர்வுகள் வெளிப்படும். இந்தியா விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதால் இந்த அதிர்வுகள் குறித்து முன்கூட்டியே அறிந்து கொண்டால், அதன்படி இஸ்ரோவின் ஆராய்ச்சிகளை சுலபமாக திட்டமிடலாம் என்பதால் இது மிகவும் அவசியமான முயற்சி என விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் இந்த ஆராய்ச்சி, அமெரிக்காவின் நாசா மையத்தின் முயற்சிகளுக்கும், ஐரோப்பிய விண்வெளி மையத்தின் முயற்சிகளுக்கும் ஈடாக கருதப்படுகிறது.

ஆதித்யா எல் 1 திட்டத்தில் உலகில் எந்த நாடும் இதுவரை செய்யாத முயற்சியாக சூரியனின் வெளிப்புற மண்டலத்தை இதுவரை இல்லாத, குறைந்த தூரத்தில் கண்டு ஆராயவும், புற ஊதா நிற கதிர்வீச்சிற்கு இடையே ஊடுருவி சூரியனின் புகைப்படங்களை எடுக்கவும் இத்திட்டம் வழிவகுக்கும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...