காலி கோட்டையில் நிலத்தடி பதுங்கு குழிகள் கண்டுபிடிப்பு

Date:

போர்த்துக்கேயர் மற்றும் டச்சு காலத்தில் கட்டப்பட்டு, பின்னர் காலப்போக்கில் புதையுண்டு போன காலி கோட்டையின் நிலத்தடி பதுங்கு குழிகளை கண்டறிந்து, அவற்றை பொது கண்காட்சிக்காக திறக்க காலி பாரம்பரிய அறக்கட்டளை நடவடிக்கை எடுத்துள்ளது.

காலி கோட்டை என்பது இலங்கையின் காலி பகுதியில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட கோட்டையாகும்.

இது பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்களால் புதுப்பிக்கப்பட்டு தற்போது 400 வருட வரலாற்றைக் கொண்டுள்ளது.

1988 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ, காலி கோட்டை சுவரை உலக பாரம்பரிய தளமாக அறிவித்தது.

தற்போது காலி கோட்டையின் நிர்வாகப் பணிகளைக் கையாளும் காலி பாரம்பரிய அறக்கட்டளையின் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், காலி கோட்டையில் அப்போது நிலத்தடியில் பதுங்கு குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தொல்பொருள் அதிகாரிகளின் அனுமதி மற்றும் மேற்பார்வையின் கீழ் காலி பாரம்பரிய அறக்கட்டளை அதிகாரிகள் இந்த இடங்களுக்குள் நுழைய முடிந்தது.

அதன்படி காலி கோட்டையில் 4 நிலத்தடி பதுங்கு குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த பதுங்கு குழிகளில் வரலாற்றில் துப்பாக்கி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கோட்டையின் கடிகார கோபுரத்தின் அடிவாரத்தில் பதுங்கு குழி ஒன்று உள்ளது.

இது பாதுகாக்கப்பட்டு தற்போது காலியின் பண்டைய வரலாறு தொடர்பான ஓவியங்கள் மற்றும் கதாபாத்திரங்களின் பிரதிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த பதுங்கு குழி அந்தக் கால கட்டத்தில் காலி கோட்டையில் இருந்த மிகப்பெரிய துப்பாக்கிக் மருந்து களஞ்சியசாலையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

கிடங்கை குளிர்விக்கும் வகையில் 10 அடி நீளம் கொண்ட ஜன்னல் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

மூன்றாவது நிலத்தடி பதுங்கு குழி, காலி நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள DIG தலைமையக வளாகத்தில் அமைந்துள்ளது.

இங்கு நிலத்தடியில் கட்டப்பட்ட துப்பாக்கி மருந்து களஞ்சியசாலைக்கு மேலதிகமாக இரகசிய சுரங்கப்பாதையாகவும்
காணப்படும் அதேவேளை ஒரு பாதுகாப்பான இரகசிய அறையும் உள்ளது.

இந்த இடங்கள் அனைத்தும் இப்போது பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டுள்ளன, மேலும் காலி பாரம்பரிய அறக்கட்டளையில் டிக்கெட்டுக்களை பெற்று இந்த நிலத்தடி பதுங்கு குழிகளைப் பார்வையிடலாம்.

சிறுவர்களுக்காக 40 ரூபாயும், பெரியவர்களுக்காக 100 ரூபாயும் அறவிடப்படுகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...