குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு வசதி

Date:

நிரந்தர வீடு இல்லாத குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக வீட்டு உதவித் திட்டத்தின் சுமார் 50% கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதன்படி, 2021ல் 12,231 வீடுகள் கட்டும் பணி தொடங்கப்பட்டு, அதில் 6,039 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2022ல் 1,465 வீடுகளின் பணிகள் தொடங்கப்பட்டாலும், 25 வீடுகள் மட்டுமே கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 1,215 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதில் 727 வீடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

மினுவாங்கொடை தொகுதியில் மட்டும் 159 வீடுகளுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு இதுவரை 78 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையானது கடந்த வருடங்களில் ஆரம்பிக்கப்பட்ட முடிக்கப்படாத வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்வதற்காக 3,750 மில்லியன் ரூபாவை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...