மோட்டார் சைக்கிள் ஓட்டுனரான டிடிஎப் வாசன், யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி, தன் உயர் ரக மோட்டார் சைக்கிளை ஓட்டிக் கொண்டே, கெமராவில் பேசுவது, மலை பிரதேசங்களுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று வந்து அந்த பதிவுகளை யூடியூப்பில் பதிவேற்றம் செய்வது என அவ்வப்போது வீடியோக்களை பதிவிட்டு வந்தார்.
அந்த யூடியூப் சேனலை பார்க்க ஒரு தனி ரசிகர் கூட்டம் உருவானது. இந்த நிலையில்தான் அவர் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
6 கோடி செலவில் தயாராகும் அந்த படத்தில், பல முன்னணி நடிகர்களும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், டிடிஎப்வாசன் பிறந்தநாளான இன்று, படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி. வைரலாகி வருகிறது.
டிடிஎப் வாசன் நடிக்கப்போகும் படத்தின் கதை என்ன?, ஹீரோயின் யார் ?போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள அவரது ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.