சேலம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சு தேர்வு

Date:

டிஎன்பிஎல் தொடரின் இறுதிகட்ட லீக் ஆட்டங்கள் திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய லீக் ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 3 லீக் ஆட்டங்களே எஞ்சியுள்ள நிலையில் இதுவரை லைகா கோவை கிங்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

6 போட்டிகளில் ஆடியுள்ள பால்சி திருச்சி அணி 6 போட்டிகளிலும் தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்தது. அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், சீகம் மதுரை பாந்தர்ஸ், ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் உள்ளன. இந்த நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய திண்டுக்கல் அணி தனது வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. அதே வேளையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்தால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியாது என்பதால் கட்டாய வெற்றி நெருக்கடியில் சேலம் ஸ்பார்டன்ஸ் அணி களம் இறங்குகிறது.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து சேலம் ஸ்பார்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...