துாதரகங்களை திறக்க ஈரான் – சவுதி சம்மதம்

Date:

ஈரானிலும், சவுதி அரேபியாவிலும் பரஸ்பரம் துாதரங்களை திறக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

வளைகுடா நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட 47 பேருக்கு 2016ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இது பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா முஸ்லிம் பிரிவினரை கோபம் அடைய செய்தது. குறிப்பாக ஷியா பிரிவினர் அதிகம் வாழும் மேற்காசிய நாடான ஈரானில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இது, இரு நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்நிலையில், இரு நாடுகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டது. இது தொடர்பாக நடந்த முயற்சியில் இரு நாடுகளும் சமாதானம் அடைந்தன. இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹுசைன் அமீர் அப்துல்லாஹியான், சவுதி அரேபியா வெளியுறவுத்துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் சவுத் ஆகியோர், சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று சந்தித்து பேசினர்.

அப்போது, மோதல் காரணமாக இரு நாடுகளிலும் மூடப்பட்ட துாதரகங்களை திறக்க இரு நாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட அறிக்கை:

இரு நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கு வரும் தடைகளை அகற்ற இரு தரப்பினரும் தயார் நிலையில் இருப்போம். பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ரியாத்திலும், டெஹ்ரானிலும் மூடப்பட்ட தூதரகங்கள் மீண்டும் திறக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...