நாணய சுழற்சியில் பங்களாதேஷ் வெற்றி!

Date:

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தானின் லாகூர் சர்வதேச விளையாட்டரங்கில் இடம்பெறும் இந்த போட்டியில் பங்களாதேஷ் அணி நாணய சுழற்சியில் வெற்றி பெற்றது.

இதற்கமைய அந்த அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதேவேளை பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.

கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் இந்திய அணி நாணய சுழற்சியில் வெற்றிபெற்றது.

இதற்கமைய முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த அந்த அணி 48.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 266 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணி சார்பில் ஹார்திக் பாண்டியா 87 ஓட்டங்களையும் இஷன் கிஷன் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டுகளையும் ஹரிஸ் ரவுப் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில் 267 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாட பாகிஸ்தான் அணி தயாரான நிலையில் மழை குறுக்கிட்டது.
இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி கைவிடப்பட்டது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...