நியுசிலாந்துக்கு சென்ற 248 பேரின் நிலை என்ன?

Date:

தமிழகத்திலிருந்து புகலிடம் கோரி நியுசிலாந்திற்கு கடல் பயணம் மேற்கொண்டவர்கள் தொடர்பில் அரசாங்க பதிவேட்டில் எவ்வித பதிவுகளும் இல்லை என நியுசிலாந்து அறிவித்துள்ளது.

நியுசிலாந்தின் குடிவரவு அமைச்ச மைக்கல் வூட் (Michael Wood ) இதனை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு சட்டவிரோதமாக வருகை தருவோரை நான்கு முதல் 28 நாட்கள் வரை தடுப்புக்காவலில் வைக்கும் சட்டம் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் திகதி அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டது.

இதன்போது நியுசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் புகலிடம் கோரியவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 90 அடி நீளமுள்ள மீன்பிடி இழுவை படகு ஒன்று, இந்தியாவின் முனம்பம் அருகே மாலியங்கராவில் இருந்து புறப்பட்டதாகவும், அதில் 248 தமிழ் புலம்பெயர்ந்தோர் அவுஸ்திரேலியா அல்லது நியூசிலாந்துக்கு செல்லலாம் என்ற நம்பிக்கையில் பயணித்துள்ளனர்.

நியுசிலாந்து குடிவரவு பதிவேட்டில் அவர்கள் தொடர்பிலான விபரங்கள் உள்ளதாக என்று வினவப்பட்டுள்ளது.

குறித்த படகு மற்றும் படகில் பயணித்தவர்கள் தொடர்பிலான விபரங்கள் நியூசிலாந்து அரசாங்க பதிவேட்டில் இல்லை என குடிவரவு அமைச்சர்  (ஆiஉhயநட றுழழன )  தெரிவித்துள்ளார்.

குறித்த புகலிட கோரிக்கையாளர்கள் நியூசிலாந்துக்கே சென்றதாக ; இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பிரபு தண்டபாணி என்பவர் தெரிவித்துள்ள நிலையில் நியூசிலாந்து அமைச்சின் கருத்து வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...