பிரான்ஸ் கால்பந்தாட்ட அணிக்கு புதிய தலைவர் நியமனம்

Date:

பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்,

இந்நிலையில், புதிய தலைவராக கிலியன் எம்பாப்வே நியமிக்கப்பட்டுள்ளார் என பிரெஞ்சு கால்பந்தாட்டச் சம்மேளனம் அறிவித்துள்ளது.

பயிற்றுநர் டெஸ்சாம்ப்ஸுடனான கலந்துரையாடலையடுத்து, அணித்தலைவர் பதவியை கிலியன் எம்பாப்பே ஏற்றுக்கொண்டுள்ளார்.

பிரெஞ்சு அணி எம்பாப்வேயின் தலைமையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நெதர்லாந்துடன் யூரோ 2024 கிண்ண போட்டியில் மோதவுள்ளது.

பிரான்ஸில் இப்போட்டி நடைபெறும். உலகக் கிண்ண இறுதிப் போட்டியின் பின் பிரான்ஸ் பங்குபற்றும் முதல் போட்டி இதுவாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...