போதைப்பொருள் கடத்திய ஆஸி. கிரிக்கெட் வீரர் கைது

Date:

கொக்கேயீன் போதைப்பொருள் கைமாற்றத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் கிறிக்கெட் வீரர் ஸ்டுவர்ட் மெக்கில் அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாண பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

 

இதன்போது அவரிடம் இருந்து சுமார் 5.50 கோடி மதிப்புள்ள கொக்கேயீன் கைப்பற்றப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு தான் கடத்தப்பட்டதாக கூறி இருந்தார். அது முற்றிலும் நாடகம் என்பதும், அவரை கடத்தியதாக கூறப்பட்ட நபர்கள் அனைவருமே அந்த போதைப் பொருள் கை மாற்றும் விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

 

ஸ்டுவர்ட் மெக்கில் அவுஸ்திரேலிய அணியில் சுழற் பந்துவீச்சாளராக 1998 முதல் 2008 வரை 44 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். அதில் 208 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தி இருக்கிறார்.

 

சர்வதேச அரங்கில் அவுஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னேவின் ஆதிக்கத்தால், அவருக்கு போட்டியாக மெக்கில் அணியில் தொடர்ந்து இடம் பெற முடியாமல் போனது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பெங்களூரு அணி 218 ரன்கள் குவிப்பு: பிளே ஆப் போட்டிக்கு தகுதி பெறுமா சென்னை?

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 68-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு...

ஐபிஎல் 2024: 2-வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராஜஸ்தான்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ்...

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட...