மீன் சாப்பிட்டதால் கை கால்களை இழந்த பெண்.. என்ன நடந்தது?

Date:

ஒரு சில உணவுகள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக மீன் உணவுகள் பலருக்கு உடனடியாக அலர்ஜி ஏற்படுத்தி, சுவாசக்குழாயை சுருக்கி உடனடியாக சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு பாதிப்பை உண்டாக்கும். அதுபோலத்தான், சமீபத்தில் 40 வயது பெண் ஒருவர் மீன் சாப்பிட்டதால் கை கால்கள் நீக்க வேண்டிய நிலைக்கு உள்ளானார். இத்தனைக்கும் இவர் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் டிலாபியா என்ற மீனை வாங்கி அவரே வீட்டில் சமைத்து சாப்பிட்டுள்ளார். என்ன நடந்தது என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட செய்தியின்படி கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பெண், டிலாபியா என்ற மீனை சமைத்து சாப்பிட்ட பின்பு, அவரது கை மற்றும் கால்கள் நீக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு உள்ளானார். இந்த மீனில் உயிர்கொல்லி பாக்டீரியா இருந்தது தான் இதற்கு காரணம் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.

இந்த பெண்மணியின் பெயர் லாரா பராஜஸ். சான் ஜோஸில் உள்ள ஒரு சந்தையில் தான் இவர் இந்த மீனை வாங்கி இருக்கிறார். அவரும் அவருடைய தோழி அனா என்பவரும் மீனை சமைத்து சாப்பிட்டு இருக்கிறார்கள். இது பற்றி வெளியான அறிக்கைகளில் விபிரியோ வுல்நிபிகஸ் என்ற ஒரு உயிர்கொல்லி பாக்டீரியா இருந்திருக்கிறது. மீனை சரியாக சமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. சரியாக சமைக்கப்படாத மீனில் இருக்கும் பாக்டீரியா அந்தப் பெண்ணில் தீவிரமான தொற்றை ஏற்படுத்தி உயிருக்கு ஆபத்தை விளைவித்து இருக்கிறது.

உயிரை பறிக்கக் கூடிய இந்த பாக்டீரியா பொதுவாகவே சமைக்காத கடல் உணவுகளில் மற்றும் கடல் நீரில் இருக்கும். இந்த பாக்டீரியா தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதற்குப் பிறகு, இவர் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கு சமீபத்தில் அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.

அவரது தோழியான மெஸ்ஸினா இதைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில் ‘லாரா கிட்டத்தட்ட இறந்து விட்டார். அவர் செயற்கை சுவாசத்தில் தான் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தார். அதைத் தொடர்ந்து மருந்துகள் வழங்கப்பட்டு கோமாவிற்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவருடைய கை விரல்களும் கால்களும் கருப்பு நிறத்தில் மாறி இருந்தன. செப்சிஸ் என்று கூறப்படும் உடல் முழுவதும் தொற்று பரவிய நிலையில் அவரது சிறுநீரகங்களும் செயலிழக்கத் தொடங்கிவிட்டன. இது யாருக்கு வேண்டுமானாலும் நடந்திருக்கலாம் என்று நினைக்கும் பொழுதே பதற்றமாக இருக்கிறது. கண் முன்னே என் தோழி லாராவிற்கு இப்படி நடந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று’ வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

தொற்று நோய் மருத்துவ நிபுணரான மருத்துவர் நடாஷா ஸ்போட்டிஸ்வூட், லாரா எப்படி பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பதைப் பற்றி KRONக்கு தெரிவித்தார். இந்த பாக்டீரியா தொற்று இரண்டு வகையாக பாதிக்கப்படலாம். முதலாவது இந்த பாக்டீரியா உள்ள கெட்டுப்போன அல்லது பச்சையான உணவை சாப்பிடுவதன் மூலம் இந்த தொற்று ஏற்படலாம். இரண்டாவது டாட்டூ போட்டுக் கொண்டவர்கள் அல்லது உடலில் வெட்டுக்காயம் இருப்பவர்கள் இந்த பாக்டீரியா வாழும் இருக்கும் நீரில் எக்ஸ்போஸ் ஆவதன் மூலம் இந்த தொற்று ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவர்கள் இந்த பாக்டீரியா தொற்றால் மிகவும் தீவிரமான நிலைக்கு உடனடியாக தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்

 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பார்டர் -கவாஸ்கர் கோப்பையை வென்று இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்- பேட் கம்மின்ஸ்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட பார்டர்...

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: அறிமுக வீரருடன் ஆடும் லெவனை அறிவித்த இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட...

விடுதலை 2 : ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு

விடுதலை 2படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி...

தென்ஆப்பிரிக்கா பவுலர்களை கதறவிட்ட நிக்கோலஸ் பூரன்: முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் எளிதில் வெற்றி

வெஸ்ட் இண்டீஸ்- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி...